[Angathan]
திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2019.01.17 திகதி திங்கட்கிழமை நேற்றையதினம் பாடசாலையின் அதிபர் திரு. எஸ்.பி. நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் 5.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் புதிய கட்டம் அமைக்கப்பட்டது. இக் கட்டிட திறப்பு விழா நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது இதன் போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. எஸ். ஜெகராஜன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன் , திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கான பெரும் குற்ற பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாதத் ஆகியோரும் கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தனர். மற்றும் நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.