Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளராக திருக்கோவில் மண்ணைச் சேர்ந்த கல்வி அபிவிருத்தியின் சிந்தனையாளன் திரு, யோகேந்திரா ஜெயச்சந்திரன் நேற்று வியாழக்கிழமை 20.12.2018 நிய…

Image


திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளராக திருக்கோவில் மண்ணைச் சேர்ந்த கல்வி அபிவிருத்தியின் சிந்தனையாளன் திரு, யோகேந்திரா ஜெயச்சந்திரன் நேற்று வியாழக்கிழமை 20.12.2018 நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று வெள்ளிக்கிழமை 21.12.2018 தனது கடமைகளை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


புதிய வலயக் கல்விப் பணிப்பாளரை வரவேற்றும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை 21.12.2018  திருக்கோவில் கல்வி வலயத்தில் மிகவும் சிறப்பாக வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வின் போது திருக்கோவில் கோட்டக்கல்வி அலுவலத்தின் முன்பாக இருந்து புதிய பணிப்பாளருக்கு மாலை அணிவித்து வலயக் கல்வி அலுவலகத்திற்கு அழைத்தவரப்பட்டு இங்கு அமைக்கப்பட்டு இருந்த சரஸ்வதி ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்று சுபநேரத்தில் தனது அலுவலகத்தில் புதிய கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்

இதனைத் தொடர்ந்து வலயக் கல்வி அலுவலகத்தில் வரவேற்று நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் புதிய பணிப்பாளர்  யோ.ஜெயச்சந்திரன் தொடர்பாக சிறப்பான உரைகள் இடம்பெற்றதை அடுத்து பதிய கல்விப் பணிப்பாளரின் சிறப்புரையுடன் வலயக் கல்வி அதிகாரிகளால் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிப்பும் வழங்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பதிய வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் எனது முழு மூச்சும் சமூக மேம்பாட்டுக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவுமே எனது காலத்தை செலவு செய்வதுடன் சமூகப் பணியில் இருந்து நான் ஒய்வு பெறுவது என்னாறால் அது எனது மரணத்தின் பின்னரே ஆகும்.

திருக்கோவில் கல்வி வலயத்தினை கிழக்கு மாகாணத்தில் முதல் தர கல்வி வலயமாக மாற்றும் இலக்கோடு தான் இன்று எனது வலயக் கல்விப் பணிப்பாளர் பதிவியினை கையேற்றுள்ளேன். எந்தவொரு தனிப்பட்ட விடயங்களுக்காகவும் எனது கல்விப் பணியில் பின்னிக்கப் போவதில்லை எனது ஒரே இலக்கு எமது சமூகம் கல்வியின் ஊடாக வளர்ச்சியடை முடியும் இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் ஓய்வு இன்றி பணியாற்றவுள்ளதுடன் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் அனைவரும் எனது சிந்தனைக்கு துணை புரிவார்கள் என்ற முழு நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கல்விப் பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலத்திலும் பின்னர் இடைநிலைக் கல்வியை தம்பிலுவில் தேசிய கல்லூரியில் கற்று அதன் பின்னர் உயர் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கற்று அங்கிருந்து வணிகப் பிரிவில் சிந்தியடைந்து கிழக்கு பல்கலைக் கழகத்தில் வணிகத்துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சிந்தியடைந்து அதன் பின்னர் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமடல் பிரதி கல்விப் பணிப்பாளராக முதல் நியமனம் பெற்று திருகோணமலை கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் கடமைபுரிந்து அங்கிருந்து திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதி கல்விப் பணிப்பாளர் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளதுடன் இவருடைய அனைத்து செயற்பாடுகளும் தனது தந்தையை முன்மாதிரியாக கொண்டு தான் கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் செயற்பட்டு வருவதாக தனது உரையில் குறிப்பிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் வரவேற்று நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், பிரதி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள்,ஆசிரியர்கள் கல்விசாரா உழியர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.











You may like these posts