
இலங்கை நிருவாகசேவையின் தரம் 3 (SLAS) இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான கடந்த வருடம் 2017ல் நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் பெறுபேறுகள் இன்று 07.11.2018 சற்றுமுன் வெளியாகியுள்ளது. இப் பரீட்சையில் சித்திபெற்ற 220 பேருக்கும் நேர்முகப்பரீட்சை நடைபெறவிருக்கிறது. இவ் நேர்முகப்பரீட்சை பெரும் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகும் 175 பேர் மாத்திரமே இலங்கை நிருவாக சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவர்.
இதன் அடிப்படையில் எமது திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவிலை சேர்ந்தவரும் இளம் ஆய்வாளரும், இளம் எழுத்தாளரும் மற்றும் எமது தம்பிலுவில்.இன்போ இணையக்குழுவின் உறுப்பினருமான திரு. விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் தெரிவாகியுள்ளார். இவருக்கு எமது தம்பிலுவில்.இன்போ (thambiluvil.info) இணையக்குழுவின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
Comments
This comment has been removed by the author.
ReplyDeleteSLEAS அல்ல SLAS
ReplyDeleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!