
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சையானது நவம்பர்மாதம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்புஇஅம்பாறைஇமற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை நவம்பர் மாதம் 12.13,14 திகதிகளில் மத்திய கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான கடிதம் உரிய தொண்டர் ஆசிரியர்களுக்கு மிகவிரைவில் அனுப்பி வைக்கப்படும்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்றம் சரியாக அமுல்படுத்தப்பட்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறை சமநிலைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!