Contact Form

Name

Email *

Message *

நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார் ; ஹிருணிகா

இலங்கையின் மாற்றத்தை கருத்திற்கொண்டு நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்த…

Image


இலங்கையின் மாற்றத்தை கருத்திற்கொண்டு நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின் பின்னர் நிகழ்நத ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”எனது தந்தையை கொலைசெய்தவர்களுடன் இன்று ஆட்சியாளர்கள் கைகோர்த்துள்ளனர்.

தான் தோற்றிருந்தால் இன்று புதைகுழியில் இருந்திருப்பேன் என அன்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் உண்மையான முகம் இன்றுதான் வெளிப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு சிறந்த விடயமல்ல” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts

Comments