
திருக்கோவில் அதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை 31.08.2018 அன்று தற்போது நோய்வாய்ப்பட்ட நிலையில் உடல் நலம் இன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள அம்பாறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். பி.கே.சி.எல்.ஜெயசிங்க அவர்கள் மீண்டும் உடல் நலம் பெற்று சுக நிலையினை அடைய வேண்டியும் அவருக்கு இறைவனின் ஆசியும் அனுக்கிரகம் அவருக்கு கிடக்கவேண்டயும் ஓர் விசேட பிராத்தனையிணையும், பூசையினையும் வைத்தியசாலையின் ஆலயத்தில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இதில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தனிடம் மற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார். மேலும் இவர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியுள்ளதுடன் மேலும் இவர் இவ் வைத்தியசாலையின் வளர்ச்சியில் பல்வேறுபட்ட வழிகளிலும் பெரிது பங்களிப்பிணை செய்துளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!