
(திருக்கோவில் நிருபர்-ASK)
திருக்கோவில் பிரதேச கஞ்சிகுடிச்சாறு பகுதியில் வைத்து கரடி தாக்குதலுக்கு இலக்காய் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (01) படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு காலை 10 மணியளவில் எடுத்து வரப்பட்டதாக வைத்தி அத்தியட்சகர் பீ.மோகனகாந்தன் தெரிவித்துள்ளார்.
இவ் சம்பவம் தொடர்பாக நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில் இருவரும் கஞ்சிகுடியாச்சாறு குளத்தில் மீன் பிடித்தக் கொண்டு இருந்த வேளை நண்பர் தான் மலம் கழித்து வருவதாக தெரிவித்து அருகில் உள்ள காட்டுக்குள் சென்றபோது நண்பர் கத்தும் சத்தம் கேட்டு ஓடியபோது தலை,முகம் எல்லாம் இரத்தம் துவைந்த நிலையில் சுமார் 5அடி உயரமுள்ள கரடியும் நண்பரும் கட்டிப் புறண்டு கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்று கத்தியபோது அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கரடியுடன் போராடி நண்பரை காப்பாற்றி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வந்ததாக தெரிவித்தார்.
அப்போது கரடி பெரிய சத்தமிட்டு கத்திக் கொண்டு தனது குட்டிக்கு அருகில் சென்று ஆக்ரோசத்துடன் இருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. கரடி தாக்குதல் காரணமாக முகத்தில் சதைத்துண்டுகள் இல்லாதும் தலையின் மேல் பகுதி வேறானது போல் இரத்தப் பெருக்குடன் காணப்பட்டது.
இதனையடுத்து வைத்தி அத்தியட்சகர் பீ.மோகனகாந்தனின் தலைமையிலான வைத்தியர்களும்,தாதியர்களும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் துரிதமாக செயற்பட்டு இரத்ததை கட்டுப்படுத்தி தலை,முகம் கைகயில் கட்டுப் போட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விரைந்து எடுத்தச் சென்றனர்.
இந்நிலையில் கரடி தாக்கியவர் திருக்கோவில் 04 காயத்தி கிராம் 11ஆம் வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான கணேசமூர்த்தி ரவிக்குமார் வயது 40 என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேசத்தில் கரடி தாக்கிய முதல் சம்பவமாக இவ் சம்பவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!