
தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலய பாலாலய பாலஷ்தாபன விஞ்ஞாபனம் - 2018
தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நிறைவுற்று (11) பதினோரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ் வருடத்தில் சுவாமியின் பாலாலய பாலஷ்தாபனம் செய்யப்படவுள்ளது.
இதற்கான கர்மாரம்ப கிரியைகள் நாளை 22.08.2018 புதன்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் விநாயகர் வழிபாடு, புண்ணியாவாசனம், ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் ஆகிய கிரியை நிகழ்வுகள் இடம்பெற்று மாலை மற்றும் இரவு கிரியைகள் இடம்பெற்று மறுநாள் 23.08.2018 வியாழக்கிழமை அன்று காலை 9.51மணி தொடக்கம் 11.27 மணியலவிலான சுபமுகூர்த்த வேளையில் சுவாமியின் பாலாலய பாலஷ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
இவ் பாலஸ்தபனம் கிரியைகள்யாவும் பாலஷ்தாபன பிரதம குரு சிவாகமகிரியாரத்னம், பிரதிஷ்டாசிரோன்மணி, சிவாச்சாரியார் திலகம், அகோர சிவாச்சாரியார், சிவப்பிராமஸ்ரீ . சி.கு.கணேஸமூர்த்தீஸ்வரகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. பா. சிவகுரு உமாபதி சர்மா இடம்பெறவுள்ளது.
அனைத்து பக்த அடியார்களும் கலந்து கொண்டு விநாயகபெருமானின் திருவருளை பெற்றேயுமாறு அழைக்கின்றனர் ஆலய பரிபால சபையினர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!