இதன் முதலாவது போட்டியில் தம்பட்டை ஏலவேன் ஸ்டார் அணியினரும் மற்றும் அக்கரைப்பற்று ரிப்பில் ஏ அணியினருக்கும் இடையில் நடைபெற்றது.
இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில்அதிதியாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இராசையா வில்ஷன் கமலராஜன் மற்றும் சிறப்பு அதிதியாக லண்டன் லூசியம் சிவன் கோயில் அறங்காவலர் சபையின் பொருளாளர் திருவாளர் சுகுமார் அவர்களும், இப் போட்டியின் பிரதான அனுசரனையாளர் தம்பிலுவில் உஷா ஜுவலர்ஸ் இன் உரிமையாளர் திரு ஜீ.எஸ். காந்தன், இணை அணுசரனையாளர் கே.எம்.ஆர் மோட்டோர்ஸ் உரிமையார் திரு. கிருதரன் மற்றும் 2000 வருட சாதாரண தர மாணவர்களின் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இப்போட்டியின் போது 1ஆம் இடம் பெறும் அணிக்கு 40,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும், 2ஆம் இடம் பெறும் அணிக்கு 20,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளது. மேலும் இதன் இறுதி போட்டிநிகழ்வு நாளை 2018.08.05 திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!