பிரமாண்டமான மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2018 நிகழ்வு ஒன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2000 வருட சாதாரண தர மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டி நிகழ்வானது எதிர்வரும் 2018 ஆகஸ்ட் மாதம் 03,04,05 திகதிகளில் தம்பிலுவில் ஆதவன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டி அணிக்கு 07 வீரர்கள் கொண்ட 5 ஓவர் மட்டுபடுத்தப்பட்ட சுற்றுப் போட்டியாகும் .
மேலும் இப்போட்டியின் போது 1ஆம் இடம் பெறும் அணிக்கு 40,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும், 2ஆம் இடம் பெறும் அணிக்கு 20,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும், இறுதி போட்டியின் ஆட்டநாயகன், தொடரின் சிறந்த துடுப்பாட்டுவீரர், தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதுகளும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியின் அனுமதி கட்டணமாக 3000/= செலுத்தப்படவேண்டும். மேலதிக விபரங்களுக்கு 0772273874-பிரியன், 0759799977-திசாந்தன் தொடர்பு கொள்க.
இப் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பிரதான அனுசரணையாளராக தம்பிலுவில் உஷா ஜுவலர்ஸ் சின் அனுசரணையினை எமது தம்பிலுவில்.இன்போ (thambiluvil.info) வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதுடன் வெற்ரிநியூஸ்.கோம் உம் மற்றும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதுடன் கேபிடல் எப் எம் ஆகியனவும் உம் அனுசரணை வழங்குகிறது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!