
முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்ட கும்பாபிஷேகம் பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இரண்டு இறுவெட்டு வெளியீடு நிகழ்வானது கடந்த 2018.06.24 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 - 10.30 மணியளவில் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. .
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நிதி அமைச்சின் திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் திரு. கே.கொபாலரேத்தினம் கலந்துகொண்டதுடன் ஆலய வண்ணக்கர் திரு வ.ஜயந்தன், ஆலய பரிபாலன சபை செயலாளர் ஏ.செல்வராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவ் இறுவெட்டில் இதற்க்கான பாடல்வரிகளை எஸ்.பி.கனகசபாபதி, இரா தேவராஜன், கோவிலூர் செல்வராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்திய பாடகர்களான அனுராதா ஸ்ரீராம் மற்றும் தேவா மற்றும் கிருஷ்ணராஜ், அனந்த், குரு, சோபியா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .
மேலும் கந்தன் காவியம் இருவேட்டிடன் பாடல்வரிகளை இரா.தேவராஜன் அவர்ககள் எழுதியுள்ளார். மற்றும் இதன் காவிய பாடலினை சஹானா மாறும் இரா.தேவராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!