Contact Form

Name

Email *

Message *

முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் [NR] கிழக்கிலங்கையின் முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் புகழ்ப…

Image
முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்



[NR]

கிழக்கிலங்கையின் முதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் புகழ்பெற்ற முருகத்தலமாகவும் விளங்குகின்ற மற்றும் வரலாற்று சிறப்பு மிகுத்த தளமாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகமானது 2018.06.25 திகதி திங்கட்கிழமை நேற்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது

இதற்காக கடந்த 2018.06.18 திகதி திங்கட்கிழமை தொடக்கம் தினம்தோறும்  கிரியைகள் இடம்பெற்று கடந்த 2018.06.23,24 திகதிகளில் எண்ணெய்க்காப்பு சாற்றல் நிகழ்வும் இடம்பெற்று நேற்றையதினம் காலை வேளை முதல் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் அவர்களின் தலைமையிலான குருமார்களின் பங்குபற்றுதலுடன்  கும்பாபிஷேக கிரியை இடம்பெற்று விளம்பி வருஷ ஆனித்திங்கள் 11ம் நாள் 2018.06.25 திகதி  திங்கட்கிழமை அனுஷ நட்சத்திரமும் திரியோதசி திதியும் சித்த யோகமும் கூடிய   பகல்  09.35மணி தொடக்கம் 10.25மணி வரையுள்ள சிங்க லக்கின  சுப முகூர்த்த வேளையில் ஆயிரக்கணக்கான பக்கத அடியார்களின் அரோகரா கோசத்துடன் சிவாச்சாரியார்களின் மந்திர அனுஸ்ரானங்களுடன் சுவாமி  ஸ்ரீ சித்திர வேலாயுத பெருமானி ன் மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக இடம்பெற்றது .

இக் கும்பாபிஷேகம் நிகழ்வில் பல்வேறு வெளி இடங்களில் மற்றும் வெளி மாவடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் இதற்காக வருகை தந்திருந்தனர்.

காணொளி, புகைப்படங்கள்  கீழே....







புகைப்படங்கள்  கீழே....
































You may like these posts

Comments