Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியையின் யந்திர பூஜை நிகழ்வு

[NR] இலங்காபுரியின் கிழக்கு இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்கதும் பெருமை கொண்டதுமான திருத்தலங்களில் ஒன்றான  திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்ப…

Image


[NR]

இலங்காபுரியின் கிழக்கு இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்கதும் பெருமை கொண்டதுமான திருத்தலங்களில் ஒன்றான  திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகக் கிரியைகளின் ஆரம்ப கிரியைகளுள்  ஒன்றான "யந்திர பூஜை" நிகழ்வானது 06.05.2018 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றையதினம் சுவாமி சித்திரவேலாயுதரின் ஆசியுடனும் அனுக்கிரகத்துடனும்  ஆலயத்தில் நடைபெற்றது.

இக்கிரியை நிகழ்வு காலை 08.00மணி தொடக்கம் 10.00மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் அவர்களின் தலைமையிலான 5 குருமார்களின் பங்குபற்றுதலுடன் மூலத்தானாதிபதி மற்றும் ஏனைய பரிவார தெரிவங்களின் யந்திரங்களுக்கான அபிசேகம், ஜபம் ஆகியன இடம்பெற்று பூஜை ஆராதனை நடைபெற்றது. மேலும் இன்று முதல் தொடர்ந்து நாற்பத்து எட்டு(48) நாட்களுக்கு யந்திரங்களிற்கு  பூஜை வழிபாடுகள் நடைபெறும் .

தொடர்ந்து எதிவரும் ஆனி மாதம் பதினெட்டாம் திகதி (2018.06.18) ஆம் திகதி கும்பாபிஷேகத்திற்கான சகல கரும கிரியைகளும் ஆரம்பமாகி ஆனி மாதம் இருபத்து மூன்று மற்றும் இருபத்து நான்காம்  (2018.06.23 & 24 )  திகதிகள் எண்ணைகாப்பு சாற்றும் நிகழ்வும் இடம்பெற்று ஆனி மாதம் இருபத்தைந்தாம் (25.06.2018) திகதி ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானிற்கு மஹா கும்பாபிஷேகம் மேற்கொள்வதற்கு திருவருரளும் குருவருளும் கைகூடியுள்ளது.

மேலும் இவ் யந்திர பூஜை நிகழ்வினை ஆலய வண்ணக்கர் திரு வ.ஜயந்தன் மற்றும் ஆலய பரிபாலன சபை  தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்,  செயலாளர் ஏ.செல்வராஜா மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து  நடாத்தினர். மேலும் இவ் யந்திர பூஜை நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.



































You may like these posts

Comments