Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON VIII)

[NR] தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையையும் மற்றும் பலத்தினையும் ஏற்படுத்தும…

Image


[NR]

தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையையும் மற்றும் பலத்தினையும் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும்   அணிக்கு பதினொருவர்(11) கொண்ட, எட்டு (8) அணிகளுக்கான றேஞ்சர்ஸ் பிரிமியர் லீக் சுற்று போட்டியின் [RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2018 (SEASON-VIII)] 8வது போட்டி நிகழ்வானது கடந்த 28.04.2018 சனிக்கிழமை அன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நைட் ரைடர்ஸ், கிங் இலவன்,கிங் கோப்ரா, ரோயல் செலன்சஸ், டா டேவேல்,  சன் ரைசஸ், டெகான் சார்ஜர்ஸ், சூப்பர் கிங்க்ஸ் ஆகிய அணிகள் பங்கு பற்றின.

இவ்வாறாக ஆறு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.  இறுதி போட்டி நிகழ்வு  07.05.2018 திங்கட்கிழமை நேற்றையதினம் இடம்பெற்றது . இவ் இறுதி போட்டியில் சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் மற்றும் சன் ரைசஸ்  அணிகள் மோதின, இப்போட்டியில் சூப்பர் கிங்க்ஸ் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதற்காக வெற்றி கிண்ணங்களை அதிதிகள் இணைத்து வழங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் திரு.வ.ஜயந்தன்,  பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு.ஏ.எஸ்.கே.பண்டார அவர்களும் கௌரவ அதிதிகளாக  பிரதேச செயலக  அபிவிருத்தி  உத்தியோகத்தர் திரு கே.கணேஸ் மற்றும் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகர்  திரு பி.அழகுதுரை மற்றும் சிரேஷ்ட கிராம அலுவலர் திரு கண. இராசரெத்தினம், பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு வை.யுவேந்திரா   விளையாட்டு  உத்தியோகத்தர் திரு கே.சாரங்கன், ஆர் என் சிடி ஹோம் தம்பிலுவில் உரிமையாளர் என் ஏ லோஜன்,  கே.எம்.ஆர் மொடோஸ் திருக்கோவில் உரிமையாளர் திரு ஆர் கிரிதரன் ஆகியோர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 1ம் இடத்திற்கு 60,000/=, 2ம் இடத்திற்கு 40,000/= ,3ம் இடத்திற்கு 30,000/=, 4ம் இடத்திற்கு 20,000/=  பணப்பரிசில்களும், கேடயங்கள் மற்றும் பாதகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இவ் விளையாட்டு போட்டிக்கு ஊடக பங்களிப்பினை தம்பிலுவில்.இன்போ வழங்கியது.





























































You may like these posts

Comments