
விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் அமைந்துள்ள நாவுக்கரசர் முன்பள்ளியின் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா - 2018 நிகழ்வானது முன்பள்ளியின் பொறுப்பாசிரியை திருமதி.N.சிவநேசன் அவர்களின் தலைமையில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் கடந்த 2018.04.28 சனிக்கிழமை இடம்பெற்றது.
இன்நிகழ்வின் போது விசேட அதிதிகளாக திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் மற்றும் பொத்துவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.இரவீந்திரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. K.ஜினித்தா மற்றும் கிழக்குமாகாண முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திரு பி.மோகனதாஸ், திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், திருநாவுக்கரசு நாயனார் குருகுல செயலாளர் திரு.பா.சத்திரேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழாவின் போது மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு அதிதிகளினால் கைவிசேடம் வழங்கி வைத்ததுடன் பரிசில்களும் வழங்கி வைக்கபட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!