Contact Form

Name

Email *

Message *

நுண்கடனில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக தம்பிலுவில் இளைஞர்களால் நுண்கடன் பற்றிய விழிப்புணர்வு

[NR] எதையும் அறியாத ஏழை மக்கள் புழுவிற்குள் தூண்டில் இருப்பதை அறியாத மீன் தூண்டிலில் அகப்பட்டுவது போல் நுண்கடனில் சிக்குண்டு பரிதவிக்கின்றனர். இந்த நுண்கடன் நோயிலிருந…

Image
[NR]

எதையும் அறியாத ஏழை மக்கள் புழுவிற்குள் தூண்டில் இருப்பதை அறியாத மீன் தூண்டிலில் அகப்பட்டுவது போல் நுண்கடனில் சிக்குண்டு பரிதவிக்கின்றனர். இந்த நுண்கடன் நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக தம்பிலுவில் பிரதேச இளைஞர்கள்  நுண்கடன் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு

கடந்த காலங்களில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்த மக்கள் அன்றாட வாழ்க்கையினை கூலித்தொழில் மூலமும், சுயதொழில் மூலமும் நடாத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் மத்தியில் பாரிய பொருளாதாரச் சுரண்டல் கண்ணுக்குத் தெரியாமல் இடம் பெற்றுக் கொண்டு இருப்பதனைக் காணமுடிகின்றது.

ஏட்டிக்குப் போட்டியாக உருவாகின்ற சில தனியார் கம்பனிகளும், சில தனியார் நிறுவனங்களும் சாதாரண மக்கள் மத்தியில் புகுந்து குறிப்பிட்ட பணத்தினை நாள்க்;கடனாக, கிழமைக்கடனாக, மாதக்கடனாக வழங்கி விட்டு அதனை அதிகூடிய வட்டியோடு அறவிடுவதற்காக முகவர்களை அனுப்புகின்றன.


சிலதனியார் கம்பனிகளும், தனியார் நிறுவனங்களும் அதிகூடிய விரைவில் பாரிய வருமானத்தினை பெறுவதனை அரசியலாக கொண்டு இவ்வாறான வேகமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

இதனை அறியாத சாதாரண ஏழை மக்கள் மொத்தமாக பணத்தினைப் பெற்று ஏதோ ஒரு வகையில் செலவு செய்த பின்னர் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு கிழமையும் அல்லது ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையினை அதிகூடிய வட்டியோடு செலுத்தவேண்டிய நிற்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அன்றாடம் தொழில் செய்து சீவியம் நடாத்தும் சாதாரண மக்கள் வாழ்கின்ற இடங்களை நோக்கி நகர்கின்ற இந்த தனியார் கம்பனிகள், தனியார் நிறுவனங்கள் வழங்குகின்ற நுண்கடன் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்களை அறியாமலேயே பாதிக்கப்படுகின்றனர். இதனால் உயிர்களும், உடமைகளும் பறிபோகின்ற சந்தர்ப்பங்களை அவதானிக்க முடிகின்றது


























You may like these posts