Contact Form

Name

Email *

Message *

வினாவிடைப் போட்டியில் விநாயகபுரம் மகா வித்தியாலயம் அணி இரண்டாம் இடம்

அம்பாறை மாவட்ட தமிழ் மாணவர் உயர் கல்விக்கான ஒன்றியத்தால் (AAE) நடாத்தப்பட்ட இவ்வாண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான வினாவிடைப் போட்டியின்  இ…

Image


அம்பாறை மாவட்ட தமிழ் மாணவர் உயர் கல்விக்கான ஒன்றியத்தால் (AAE) நடாத்தப்பட்ட இவ்வாண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான வினாவிடைப் போட்டியின்  இறுதிச்சுற்று போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன் தினம் 10.04.2018 அன்று  கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கிளனி மண்டபத்தில் நடைபெற்றது.


இவ்  வினாவிடைப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு திகோ/ விநாயகபுரம் மகாவித்தியாலய அணியும், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அணியும், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அணியும், விபுலானந்தா மத்திய கல்லூரி அணியும் போட்டியிட்டிருந்தன.

இதில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம் அணிகளுக்கிடையிலான இடையில்  நடைபெற்றது. இப்  போட்டிக்கு நடுவர்களாக இரசாயனவியல் ஆசிரியை திருமதி.சுரேஷ்குமாரி சுதர்சன், பௌதிகவியல் ஆசிரியர் திரு .தெய்வீகன் ஆகியோர் கடமையாற்ற அதிதிகள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவ பொறியியல் பீட சிரேஷ்ட மாணவர்கள் முன்னிலையில் போட்டி சிறப்பாக நடைபெற்றது. 

இறுதிச்சுற்றுப் போட்டியில் உவெஸ்லி உயர்தரப் பாடசாலை வெற்றி பெற்று சம்பியனானது. வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்ட்டன. 

இந் நிகழ்வில் அதிதிகளாகவைததியகலாநிதி டாக்டர் சித்ரா தேவராஜன் ,கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ். சந்தியாகு , உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர்வி.பிரபாகரன், விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபர் அன்ரன் ஆகியோரும் மற்றும் கல்முனை தமிழ் ஒன்றியத்தின் சார்பில் சிவதர்ஷன்,கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை.தலைவர் பிரதீபன், செயலாளர் நிதான்சன், மற்றும் ஆசிரியர்கள், மருத்துவ பொறியியல் பீட சிரேஷ்ட்ட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

இவ்வமைப்பானது 2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரிட்சையில் மருத்துவ பொறியியல் பீடத்திற்கு தெரிவான தமிழ் மாணவர்களின் அயராத முயற்சியினாலும், அர்ப்பணிப்பினாலும் வருங்கால கல்விச்சமூகத்தின் கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் பின்தங்கியுள்ள மாவட்ட தமிழ் மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரித்து பல்கலைக்கழக அனுமதி பெறும் தமிழ் பேசும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்கோடு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ,உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உயர் கல்விக்கான ஒன்றியம்(AAE) வினாவிடைப் போட்டிகள் மாத்திரமின்றி, செயலமர்வுகள், முன்னோடிப்பரீட்சைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், போன்ற கல்வி ஊக்குவிப்பு செயற்பாடுகளை கடந்த ஆறு வருடங்களாக முன்னெடுத்துவருகின்றது கல்விச்சமூகத்தால் வரவேற்கப்படுகிறது.







You may like these posts

Comments