Contact Form

Name

Email *

Message *

நாளை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் கொடித்தம்பம் வைபவம்

(காரைதீவு  நிருபர் சகா) வரலாற்று  பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் புதிய கொடித்தம்பம் நடல் வைபவம் நாளை 06.04.2018 வெள்ளிக்கிழமை ஊர்வலம் மற…

Image


(காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்று  பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் புதிய கொடித்தம்பம் நடல் வைபவம் நாளை 06.04.2018 வெள்ளிக்கிழமை ஊர்வலம் மற்றும் சமயசடங்குகளுடன் நடைபெறவுள்ளது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் சமயகிரியைகளுடன் இக்கொடித்தம்பம் நடல் வைபவம்  நாளைகாலை ஆரம்பமாகவுள்ளது.



 நாளைகாலை கொடித்தம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 2மணி முதல் 3மணிவரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் கொடித்தம்பம் ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில்  நடப்படுமென்று ஆலயபரிபாலனசபைச் செயலாளர் ஏ.செல்வராஜா தெரிவித்தார்.


காட்டிலிருந்துகொண்டுவரப்பட்ட 26அடி உயரமுடைய 2அடி விட்டமுடைய நாகமரத்திலான இக்கொடிமரம் மற்றும் அதன் அமைப்பு வேலைகளை களுவாஞ்சிக்குடி லாவண்யா நகைமாட உரிமையாளர் கே.பாக்கியராஜா உபயகாரராக பொறுப்பேற்று நடாத்துகின்றார். இதற்கென சுமார் 15லட்சருபா செலவாகின்றது.

அண்மையில் ஆலயத்தலைவர் சு.சுரேஸ் தலைமையிலான பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்ற   பாக்கியராஜா கொடிமரத்தின்கீழுள்ள மண்டப மாபிள் வேலைகளையும் பொறுப்பேற்றுள்னார்.
15ஆண்டுகளுக்குப்பிற்பாடு எதிர்வரும் ஜூன்மாதம் 25ஆம் திகதி புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் நடைபெறவிருப்பது தெரிந்ததே. அதனையொட்டி ஆலயம் புதுப்பொலிவுபெற்று வருகின்றது.








You may like these posts

Comments