Contact Form

Name

Email *

Message *

கடற்கரையோரத்தினை சுத்தம் செய்யும் நிகழ்வு

"பூமி மாதாவை பாதுகாப்போம்" ("Proctect The Planet") எனும் கருப்பொருளின் கீழ் உலகளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றத…

Image


"பூமி மாதாவை பாதுகாப்போம்" ("Proctect The Planet") எனும் கருப்பொருளின் கீழ் உலகளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் “எமது கிராமத்தை நாம் சுத்தமாக வைத்திருப்போம்” எமது கடற்கரையை மாசுபடுத்தியுள்ள பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை அகற்றி எமது பிரதேசத்தை அழகுபடுத்த ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி நிலையத்தினரின் ஏற்பாட்டில் 08.04.2018 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றையதினம்  காலை 8.00 - 9.30 மணிவரை கரையோரத்தினை  சுத்தப்படுத்தும் நிகழ்வானது  தம்பிலுவில் தாழையடி சிவனாலயத்தில் ஓம்காரத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வானது  தம்பிலுவில் தாழையடி சிவனாலயம் தொடக்கம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் வரையுள்ள கடற்கரை பிரதேசத்தில் காணப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை அகற்றுவதன் மூலம் சூழலினை அழகூட்டும் ஒரு செயற்ப்பாடாகக்காணப்பட்டது .

இச் சுத்தப்படுத்தல் செயற்பாட்டில் சுமார் 120மேற்பட்டோர்  கலந்து கொண்டிருந்தனர்.  இதில் இந்நிகழ்வில் இலங்கைக்கான சத்திய சாய் சர்வதேச நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய சேவை இணைப்பாளர் R.சந்திரகாசன் , தம்பிலுவில் சாயி நிலைய தலைவர் K.புவனராசா, திருக்கோவில்  சாயி நிலைய தலைவர் S.பிரசாந் அவர்களும் இச் சேவை திட்டத்தினை நடாத்தி சென்றனர். மேலும் , சுகாதாரப் பரிசோதகர்கள் ,திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர்  , தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சத்திய சாய் நிலையத்தின் சாய் பக்தர்கள், ஏனைய சத்ய சாய் நிலையத்தின் உறுப்பினர்கள்,
  தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2001 வருட சாதாரண தர மற்றும் 2004 வருட உயர்தர மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் திருக்கோவில் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். 








































You may like these posts

Comments