
[Sathu.N ]
சித்திரை புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாகவும் மற்றும் தமிழர் கலை மற்றும் பண்பாடுகளை பேணியும் அதன் முக்கியத்துவத்தினை வெளிக்கொணரும் வகையிலும் தம்பிலுவில் திருவருள் சமூக மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும் கலைஞர்கள் கௌரவிப்பும் நிகழ்வானது 2018.04.16 திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி கலை அரங்கில் இடம்பெற்றது
இன் நிகழ்வானது கழகத்தின் தலைவர் திரு சோமசுந்தரம் தவராசா அவர்களின் தலைமையிலும் செயலாளர் திரு சின்னத்தம்பி விநாயகமூர்த்தி அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது இசைக்கலைஞராக சுமார் அரைநூற்றாண்டுகளா சிறந்த பாடகராக திகந்து வந்த திரு கே.சண்முகராசா அவைகளும் மற்றும் சாஸ்திரிய நடனக்கலையை தனது சேவைக்காலத்திலும் ஓய்வு நிலையிலும் வளர்த்துக்கொண்டு மற்றும் எமது பிரதேசத்தில் பல நடன ஆசிரியர்களை உருவாக்கிய திருமதி இராஜகுமாரி சிதம்பரம் அவர்களும் மற்றும் சாஸ்திரிய சங்கீதக்கலையை தனது சேவைக்காலத்திலும் ஓய்வு நிலையிலும் வளர்த்துக்கொண்டு மற்றும் எமது பிரதேசத்தில் பல சங்கீத ஆசிரியர்களை உருவாக்கிய செல்வி ஆ.பரமேஸ்வரி அவர்களும்
மற்றும் சைவ சமய பணியில் இளமைக்காலத்திலும் ஓய்வுபெற்ற நிலையிலும் ஈடுபட்டு கோவில் தொண்டுகளையும் செய்து வருபவர் திரு கே. பஞ்சாட்சரம் ஓய்வுபெற்ற முகாமையாளரும் மற்றும் வாத்திய கலையராக மார் அரைநூற்றாண்டுகளா தபேலா டோலக் வாத்தியங்களை இசைத்துவருபருமான திரு வே.கணபதிப்பிள்ளை (குஞ்சித்தம்பி) ஆகிய கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த வருடம் 2017ல் தமிழ் மொழி தினபோட்டியில் பண்ணிசை பிரிவில் தேசியரீதியில் முதலாமிடம் பெற்ற தம்பிலுவில் தேசிய பாடசாலையின் மாணவி செல்வி. கேசவி அவர்களின் பண்ணிசை நிக்கவும் இடம்பெற்று அம் மாணவியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் 2017ல் தமிழ் மொழி தினபோட்டியில் பண்ணிசை பிரிவில் தேசியரீதியில் முதலாமிடம் பெற்ற தம்பிலுவில் தேசிய பாடசாலையின் மாணவி செல்வி. கேசவி அவர்களின் பண்ணிசை நிக்கவும் இடம்பெற்று அம் மாணவியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன் போது மாணவர்களின் பண்ணிசை மற்றும் பரத நாட்டிய நடன நிகழ்வும் மாறும் விநாயகபுரம் சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்தினரின் சிறப்பு நாட்டுக்கூத்து நிகழ்வும் இடம்பெற்றது மேலும் இந்நிகழ்விற்கு தம்பிலுவில் இன்போ ஊடக அனுசரணை வழங்கி இருந்தது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!