[NR]
திருக்கோவில் அதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தங்களின் கடமைகளை மேற்கொள்வதில் சிலர் தடைகள் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் கூறி, வைத்தியர்கள், இன்று 18.04.2018 பணிப் பஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு வரும் வெளி நோயாளர்கள் தங்களின் நோய்களுக்கான மருத்தவ நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாது சிரமப்படுகின்றனர். அத்தோடு, பணமில்லாத காரணத்தால் வெளியில் மருந்து பெறமுடியாது, நோயால் துன்பப்பட்டு வீட்டுக்குச் செல்வதாக வெளி நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
இது தொடர்பாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
கடந்த சித்திரை புதுவருட தினத்தன்று 14.04.2018 திகதி இடம்பெற்ற விபத்தினை தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தொடர்பிலும், அங்கு பணிபுரியும் வைத்தியர்கள் தொடர்பாகவும் மற்றும் ஊழியர்கள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட தரப்பினர்களினாலும் முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மற்றும் கருத்து பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்களை பயன்படுத்தியுள்ளனர்
இதனை தொடர்ந்து இக் தவறான கருத்து பரிமாற்றங்கள், விமர்சனங்கள் காரணமாக மனமுடைந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாங்களுக்கு இங்கு வேலை செய்யும் மனோநிலை மற்றும் சூழல் இங்கு காணப்படாத காரணத்தினால் இன்றையதினம் வைத்தியர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தங்களது முறைப்பாடு பதிவு செய்வதற்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய தினம் வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும். அவசர சிகிச்சைபிரிவு மற்றும் நோயாளர் தங்குமிடம் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை தான் தற்போது முன்னெடுத்து வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!