Contact Form

Name

Email *

Message *

தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் நான்கு வீடுகளையும் பயிர்களையும் நேற்று   ஞாயிற்றுக்கிழமை 15.04.2 017 இரவு க…

Image

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் நான்கு வீடுகளையும் பயிர்களையும் நேற்று   ஞாயிற்றுக்கிழமை 15.04.2017 இரவு காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.


இதன்போது வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பியதுடன்

இதனைத் தொடர்ந்து அயலவர்களில் உதவியுடன் யானைகளை விரட்டியடித்துள்ளனர்.

இப் பிரச்சினை தீர்த்து வைக்கும் நோக்கில் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிதிகள் ஒதக்கப்பட்டு 45 கி.மீற்றர் தூரம் யானை வேலிகள் 2013, 2014ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டன. இது வரை பூர்த்தி செய்யப்படவில்லை .

கடந்த காலங்களில் இப் பிரதேசத்தில் யானை அடித்து இறந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது .

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக யானை வேலியை முடித்து தரும் படி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர் . 





You may like these posts

Comments