
தம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் எமது பாரம்பரியத்தை பேணுவோம் - சிக்கனத்திற்கு வழிகோருவோம் எனும் தொனிபோருளின் கீழ் இவ் வருடத்திற்கான தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டுவிழா - 2018 நிகழ்வு எதிர்வரும் 2018.04.22 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவிற்கு அனைவரையும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் முகாமையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி தம்பிலுவில்.
இங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளாவன :
01. தேசியக்கொடியேற்றல
02. மங்களவிளக்கேற்றல்
03. தேவாரம்
04. தலைமையுரை
05. சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம்(ஆண்,பெண் 10வயதுக்குட்பட்டது)
06. பலூன்உடைத்தல் (ஆண்,பெண் 10வயதுக்குட்பட்டது)
07. மாஊதி காசுபொறுக்குதல்( ஆண்,பெண் 15வயதுக்குட்பட்டது)
08. தேசிக்காய் ஓட்டம் ( ஆண்,பெண் 15வயதுக்குட்பட்டது)
09. யானைக்கு கண்வைத்தல்
10. 100ஆ ஓட்டம் ( ஆண்,பெண் 15வயதுக்குட்பட்டது)
11. கிடுகுபின்னுதல் (பெண்)
12. சங்கீதக்கதிரை
13. பரிசில்கள் வழங்கல்
14. அதிதிகள் உரை
15. நன்றியுரை.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!