
[LRU]
2008 ஆம் ஆண்டு ஆரசியல் கைதியாக கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இரு பிள்ளைகளின் தந்தையை மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இன் நிகழ்வினை தம்பிலுவில், திருக்கோவில் பிரதேச தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் இளைஞர் ஒண்றியமும் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பல பொது மக்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள மகஜரில் கையெழுத்திட்டனர்.
ஆனந்தசுதாகரன் கடந்த 15.03.2018 வியாழக்கிழமை தனது மனைவியின் மரணச் சடங்கில் கலந்து கொண்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏறும்போது தனது மகள் சங்கீதா அவருடன் வாகனத்தில் ஏறியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 26.03.2018 நாளையதினமும் காலையிலும் இவ் கையெழுத்து போராட்டம் தொடரும் பங்கெடுக்க தவறியவர்கள். நாளை தங்களது கையெழுத்து பிரதிகளை இடுமாறும் வேண்டுகின்றோம்.








Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!