Contact Form

Name

Email *

Message *

10 நாட்களுக்கு அவசரகால நிலை; இன்று வர்த்தமானி

எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனமொன்றை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அறிவித்துள்ளார்.

Image
எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனமொன்றை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அறிவித்துள்ளார்.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இன ரீதியான தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (06) காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் குறித்த பிரகடனம் தொடர்பான வர்த்தமானியை இன்று (06) வெளியிடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் 7 வருடங்களுக்கு பிறகு, இலங்கையில் மீண்டும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று (05) இரவு திகன பிரதேசத்தில் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாஸித் எனும் 28 வயது இளைஞன் பலியாகியுள்ளார்.


குறித்த இளைஞன் தங்கியிருந்த வீடு உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில், இன்று (06) அதிகாலை குறித்த இளைஞன் அவ்வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

You may like these posts

Comments