Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரம் கோரைக்களப்பு முகத்துவாரம் பகுதியில் ஆணின் சடலமொன்று கரையொதுங்கியது

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம், கோரைக்களப்பு முகத்துவாரம் பகுதியில் இன்று (09) காலை ஆணின் சடலமொன்று, கரையொதுங்கியுள்ளதாக, திருக்கோவில் பொலிஸார்…

Image

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம், கோரைக்களப்பு முகத்துவாரம் பகுதியில் இன்று (09) காலை ஆணின் சடலமொன்று, கரையொதுங்கியுள்ளதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.



திருக்கோவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைப் பொலிஸார் மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தம்பிலுவில் 01 வில்லியம்பிள்ளை வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து கருணாநிதி (வயது 49) என, உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேசன் தொழிலுக்காக தனது வீட்டிலிருந்து நேற்று (08) புறப்பட்டுச் சென்றிருந்த இவர், இரவு வரை வீடு திரும்பாத நிலையில், இன்று சடலமாகக் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் கால்களில் மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தங்கூசீ நூல்கள் காணப்படுவதுடன், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(Battinews)


You may like these posts

Comments