Contact Form

Name

Email *

Message *

திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழா

திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2018.01.17 திகதி புதன்கிழமை நேற்றையதினம்  பாடசாலையின் அதிபர் திரு. எஸ்.ப…

Image

திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2018.01.17 திகதி புதன்கிழமை நேற்றையதினம்  பாடசாலையின் அதிபர் திரு. எஸ்.பி. நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன்  கட்டிட திறப்பு விழா  நிகழ்வு விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. எஸ். ஜெகராஜன் மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தனர். மற்றும்  நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 மேலும் இவ் பாடசாலையானது திருக்கோவில் கல்வி வலயத்தில் 43வது பாடசாலையாக கடந்த வருடம் 2017 ஜனவரி மாதம் ஆரம்பித்த வைக்கப்பட்டதுடன் இவ் பாடசாலை தற்காலிக கட்டம் ஒன்றில் 49 மாணவர்களுடன் இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இக் கட்டிடத்திற்கான நிதியாக 50 இலட்சம் ரூபா நிதி  
மற்றும் தளபாடத்திற்கான நிதியாக 10 இலட்சம் ரூபா நிதி என்பன திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. எஸ். ஜெகராஜன் அவர்களின் முயற்சியினால் மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டிருந்தது. 

கடந்த வருடம் 2017.09.04 திகதி இக்கட்டிடத்திற்க்கான அடக்கல் நடப்பட்டது, அவ் அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் குறிப்பிட்டது போன்று இவ்வருடம்(2018) ஜனவரி மாதத்தில் இக்கட்டிடம் திறந்து வைக்கபட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



















You may like these posts

Comments