Contact Form

Name

Email *

Message *

இன்று தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில், விநாயகபுரம் மக்கள் இல்மனைட் அகழ்வினை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்

தம்பட்டை , தம்பிலுவில் , திருக்கோவில் , விநாயகபுரம் மக்கள் ஓன்று சேர்ந்து கொட்டும் மழையில் பொருட்படுத்தாது இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதனால் கரைய…

Image

தம்பட்டை , தம்பிலுவில் , திருக்கோவில் , விநாயகபுரம் மக்கள் ஓன்று சேர்ந்து கொட்டும் மழையில் பொருட்படுத்தாது இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதனால் கரையோரப் பிரதேசம் பாரிய அழிவுகளை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து, திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பேரணியாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம், 'திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் - மாபியாக்களை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (27) இடம்பெற்றது.

தம்பட்டடை, தம்பிலுவில் மக்கள் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்திலும், திருக்கோவில் மக்கள் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாகவும், விநாயகபுரம் மக்கள் விநாயகபுரம் பேரூந்து தரிப்பிடம் ஆகிய டூன்று இடங்களில் கூடி மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பேரணியாக வந்,து திருக்கோவில் மணிக்கூட்டுகோபுர சந்தியில் ஒன்றுகூடிய 3,000க்கும் மேற்பட்ட மக்கள், வீதிகளின் இருமருங்கிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் வாகன நெரிசல் காணப்பட்டது.

இதன் போது மக்கள்
" உயிரே போனாலும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து எமது மண்ணை பாதுகாப்போம் "

"மண்ணை தோண்டுபவனை விரட்டியடிப்போம் "
போன்ற கருத்துக்களை தெரிவித்தனர்.





காணொளி

















You may like these posts

Comments

  1. என்ன நடந்தாலும் இத்திட்டதை நடக்க விடமாோம்

    ReplyDelete

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!