
எமது பிரதேசத்தில் பிறந்து கல்வியினால் மேலோங்கி உயர்பதவிகளை வகித்து எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த எம்மண்ணின் தோன்றல்களைப் பாராட்டி, கௌரவிக்கும் முகமாக தம்பிலுவில் பொருளாதார, சமூக அபிவிருத்தி அமைப்பினால் [ரெஸ்டோ] (TESDO - Thambiluvil Economic, Social Development Organization) நாடாத்தப்படும் கௌரவிப்பு விழா -2017 நிகழ்வானது இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வானது 2017.11.05 திகதி ஞாயிற்றுக்கிழமை நாளையதினம் மாலை 3.00 மூன்று மணியளவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இன் நிகழ்வில் அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் விழாக்குழுவினர்.

Comments
ரெஸ்டோ அமைப்பு தேர்தலை அடிப்படையாக வைத்து செயற்படுகின்றதா? ஏனெனில் குறித்த சில குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை மட்டும் பாராட்டுகின்றனர்.
ReplyDeleteகல்விக்கு முக்கியத்துவம் வழங்காத அமைப்பு எவ்வாறு கல்விமான்கள் அனைவரையும் கௌரவிக்குமென எதிர் பாக்கலாம் ?
ReplyDeleteமேற்படி நிகழ்வு ஏன் திடீரென தேர்தல் நெருங்கும் காலக்கட்டிடத்தில் தொடங்கப்பட்டது . அவ்வாறு தொடங்கப்படினும் ஏன் ஊரில் ஆயிரம் வேலை இருக்க குறிப்பிடட சிலரை பாராட்டிடவேண்டிய தேவை ? சிந்தியுங்கள் .
ReplyDeleteஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் இந்த அமைப்பில் ஒரு பகுதியினர் நல்ல பற்றுடன் சேவையாற்றுகிறார்கள். அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . அவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை அறியும் நாள் தொலைவில் இல்லை.#SL Local Election 2018 January
ReplyDeleteநல்ல நோக்கத்துடன் சேவை ஆற்றுபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!