
[NR]
திருக்கோவில் பிரதேச சுவாட் அமைப்பின் கீழ் செயற்படும் 14 கிளைக் கிராம நிர்வாகிகள் கலந்துரையாடல் கடந்த 2017.10.21 சனிக்கிழமை அன்று திருக்கோவில் பிரதேச நிருவாக உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தி ஜீவகுமார் அவர்களுடைய தலைமையில் ன் திருக்கோவில் பிரதேச காரியாலம் தம்பிலுவிலில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் நிகழ்வில் பிரமுகர்களாக தலைமை அலுவலக பணியாளர் திருமதி த.கிருஸ்ணவாணி அவர்கள், திருக்கோவில் பிரதேசபை செயலாளர் திரு. அ.சுந்தரகுமார், திருக்கோவில் மின்சாரசபை மின் அத்தியட்சகர் திரு N.நூர்கான், விவசாய போதனாசிரியர் திருமதி. தர்சினி ரவிச்சந்திரன் ஆகியோருடன் சுவாட் அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது ஒவ்வொரு அதிகாரிகளும் அவர்களது துறைசார்ந்த கருத்துக்களை வழங்கினர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!