Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரம் VHP நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வு

[NR] விநாயகபுரம் VHP(Village Heartbeat Project) நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வானது 2017.10.16 திகதி திங்கட்கிழமை இன்றையதினம் விநாயகபுரம் சக்தீ…

Image
[NR]

விநாயகபுரம் VHP(Village Heartbeat Project) நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தின நிகழ்வானது 2017.10.16 திகதி திங்கட்கிழமை இன்றையதினம் விநாயகபுரம் சக்தீசன் விளையாட்டு கழக மைதானத்தில் VHP நிலையத்தின் தலைவர் திரு.எஸ்.விவேகனந்தராஜா  தலைமையில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன் அவர்களும் அதிதிகளாக  திருக்கோவில் மக்கள் வங்கியின் முகாமையாளர்  ஏ.ஜி.நிசாம்,   திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு .ஐ.பி. சில்வா, சட்டத்தரணி எஸ்.சசிராஜ், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின்  உதவிப் பணிப்பாளர் திரு கே.பிரபாகரன், பொத்துவில் பிரதேசபை திரு வி.கருணாகரன், இலங்கை கோரை குரூப் தென்னை அபிவிருத்தி சபையின் அத்தியட்சகர் திரு.அசங்க அவர்களும் மற்றும் தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திரு. கே.குலேந்திரேஸ்வரன் மற்றும் ஆசிரியர் திரு எஸ். எம். அன்ரனி வுருனோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது விசேட நிகழ்வாக விநாயகபுரம் VHP நிலையத்தில் கல்வி கற்று இவ்வருடம் அண்மையில் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய பனிரண்டு (12) மாணவர்கள் பதக்கங்கள் மற்றும் பரிசில் வழங்கி பராட்டப்படனர் மேலும் மாணவர்கள்  மற்றும் பெற்றோர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில்  பாலர்பாடசாலை மாணவர்களை மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள், மற்றும்   VHP நிலையத்தின் மாணவர்களை மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.












































































You may like these posts

Comments