திருக்கோவில் விபுலானந்தா அகடமியின் விருது வழங்கும் விழா-2017 நிகழ்வானது இன்று 12.04.2017 புதன்கிழமை திருக்கோவில் விபுலானந்தா அக்கடமியின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு உயர் தொழிநுட்பக்கல்லூரியின் பணிப்பாளருமான திரு. S .ஜெயபாலன் அவர்களின் தலைமையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேசத்தில் 2015/2016 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும், 2016ல் க.பொ.த - சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதி உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களது சிறப்புமிகு சாதனையினைப் பாராட்டியும், கௌரவப்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாணவர்களினால் கற்பித்த ஆசிரியர்ளுக்கு நினைவு சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு பகிர்த சுகிர்த சர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஆர் இராஜேந்திரா, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் பி.மோகனகாந்தன், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு.ஏ.எஸ்.கே.பண்டார, , திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் திரு.எச்.எம்.ஹேரத், விசேட திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் திரு.வி.குணாளன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் அவர்களும் மற்றும், நட்சத்திர அதிதிகளாக தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் அதிபர் திரு.வ.ஜயந்தன், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம், மற்றும் திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கு உரை ஆற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் கூறுகையில் " நாட்டில் அரசாங்கமானது மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் பாடவிதானங்களை இலங்கையின் கல்வி திட்டத்தினுள் உள்வாங்க வேண்டும். அதாவது விஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம், தொழில்நுட்பம் போன்ற தொழில் வாய்ப்பினை வழங்கும்துறைகளை மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் நாட்டுக்கு பயன்மிக்க, சர்வதேச ரீதியாக போட்டியிட்டு தங்களது ஆளுமைகளை மற்றும் திறமைகளை விருத்தி செய்யக்கூடிய துறைகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும், அப்படி நாம் தெரிவு செய்யும் போதுதான் உலக நீரோட்டத்திற்கு ஏற்ற வகையில், நவீன உலகிற்கு ஏற்றவகையிலும் ஏற்றால் போல் நாம் ஒரு உறுதியான, ஸ்திரமான நிலையினை அடையமுடியும். இதன் மூலமே கல்விச் சமூகத்துடன் கூடிய பொருளாதார அபிவிருத்தியினை நாடு அடைய முடியும்" என கூறினார்.
மேலும் இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.






























































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!