Contact Form

Name

Email *

Message *

கடல்கொந்தளிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசம் இன்று அடிக்கடி ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்கள…

Image
மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசம் இன்று அடிக்கடி ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் 50 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும்.

இதேவேளை காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாத்திரம் ஓரளவு மழையை எதிர்பார்க்க முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கரையோரத்திற்கப்பாலான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 55 கிலோமீற்றரிலிருந்து 60 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக் கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறப்பிட்டுள்ளது.

இதற்கமைவாக கடற்பிரதேசம் அடிக்கடி கொந்தளிப்புடன் காணப்படக்கூடும்.

இதேவேளை நாடுமுழுவதிலும் உள்ள கரையோரப்பிரதேசங்களிலும் தரைநிலப்பகுதியில் பொரும்பால இடங்களில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

You may like these posts

Comments