2017 ஆண்டின் நான்கு மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கு காய்ச்சலினால் 8,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் டெங்கு காய்ச்சல் குறித்த கடந்த வாரத்துக்கான தரவுகளின் பிரகாரம், வடக்கின் யாழ். மாவட்டத்தில் 2,048 பேரும், மன்னார் மாவட்டத்தில் 346 பேரும், வவுனியா மாவட்டத்தில் 324 பேரும் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முறையே 180, 87 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. இதற்கமைய வட மாகாணத்தில் டெங்கு காய்ச்சலினால் இதுவரை 2,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5,347 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இதில், திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிண்ணியா, மூதூர் உட்பட திருகோணமலை மாவட்டத்தில் 3,476 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,696 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 175 பேரும் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவ் வருடத்தின் இந்தநான்கு மாதங்களில் நாடளாவிய ரீதியில் 34,059 பேர் டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டும் அவர்களில் 61 பேர் உயிரிழந்துமுள்ளனர். டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இவ்வெண்ணிக்கையில் அதிகளவிலானோர் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் 7,540 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 1,848பேர் கொழும்பு மாநகர எல்லை பிரதேசங்களுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!