Contact Form

Name

Email *

Message *

பல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா - 2017

[Photos: NR] திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின்(SVO) 3ஆம் வருட நிறைவினை முன்னிட்டு திருக்கோவில் வைகறை கலா மன்றம், கொழும்பு கண்ணகி கலாலயமும் இணைந்து பெருமையுடன் வழங்கும் …

Image
[Photos: NR]

திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின்(SVO) 3ஆம் வருட நிறைவினை முன்னிட்டு திருக்கோவில் வைகறை கலா மன்றம், கொழும்பு கண்ணகி கலாலயமும் இணைந்து பெருமையுடன் வழங்கும் பல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா - 2017 நிகழ்வானது 2017.04.19 புதன்கிழமை நேற்றையதினம்  திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.பி.நந்தபாலு தலைமையில் வினாயகபுரம் SPC வளாகத்தில் மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.


இந்நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில்   பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட  கிழக்கு  மாகாணசபை  உறுப்பினர் கெளரவ முருகேசு இராஜேஸ்வரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் திரு.A.சுந்தரகுமார், கிழக்குமாகாண ஜெர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பணிப்பாளர்  திரு.கே.ஜெயசிறில், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம்,  சமூக தரிசன ஒன்றியத்தின் தலைவர் திரு கே.பத்மநாதன் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை முன்னால் தலைவர் பேராசிரியர் கௌரவ திரு. சி. மௌனகுரு அவர்களும் மற்றும் பிரபல பல்துறை நடிகை திருமதி மகேஸ்வரி ரட்ணம் மற்றும் எமது இலங்கை நாட்டு பல்துறைக் கலைஞர்கள் பலரும் இதன் போது மாலை அணிவித்தும், விருதுகள் வழங்கியும்  கெளரவிக்கப்பட்டனர். மேலும் இதன் போது கலை நிகழ்ச்சிகளாக நடனம் மற்றும் கூத்து நிகழ்வும் இடம்பெற்றது.






























































You may like these posts

Comments