இன்று மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாகும். இம் சர்வதேச மகளீர் தினத்தில் மகளிரினை கௌரவப்படுத்தும் முகமாக மகளிர் தின நிகழ்வானது தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையின் ஏற்பாட்டில் வங்கி முகாமையாளர் திரு ஏ. அன்ராடோ தலைமையில் 08.03.2017 இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் M.மோகனகாந்தன் மற்றும் விநாயகபுரம் காயத்திரிகிராம மகளிர் சங்கதத்தின் தலைவி திருமதி பரமேஸ்வரி மற்றும் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் திரு கே,கெளரிதீபன் ஆகியோரும் பெண்கள் குழுக்களின் உறுப்பினர்களும் மற்றும் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இதன் போது மகளிர் தினத்தினை முன்னிட்டு தேசிய சேமிப்பு வங்கியில் ஸ்திரி கணக்கில் பணவைப்பு செய்த மற்றும் புதிதாக கணக்கு ஆரம்பித்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
மேலும் இதன் போது மகளிர் தினத்தினை முன்னிட்டு தேசிய சேமிப்பு வங்கியில் ஸ்திரி கணக்கில் பணவைப்பு செய்த மற்றும் புதிதாக கணக்கு ஆரம்பித்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!