Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தினை கடலரிப்பில் இருந்து பாதுகாக்குமாறு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ] அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடலரிப்பினை தடுத்து கரையோர பிரதேசத்தினையும், வரலாற்று முக்கிய இடங்கள…

Image
[திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே ]

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடலரிப்பினை தடுத்து கரையோர பிரதேசத்தினையும், வரலாற்று முக்கிய இடங்களையும் காப்பாற்றுமாறு கோரி கடந்த 2017.03.08  புதன்கிழமை காலை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஆரம்பமானது.


இவ் ஆர்ப்பாட்டம் திருக்கோவில் பிரதேச பொது அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்டதுடன் இவ் ஆர்ப்பாட்டம் திருக்கோவில் முருகன் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்து திருக்கோவில் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று நிறைவடைந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் எமது பிரதேசத்தில் தொடர்ந்து கடலரிப்பு இடம்பெற்று வருவதாகவும் இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகள் கருசணை காட்டாது இருந்து வருகின்றனர்.இதனை உடனடியாக தடுக்குமாறு கோரி ஒரு கவணயீர்ப்பு செய்யும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு உள்ளோம் என தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட பொது மக்கள் பின்வருமாறு தமது கோரிக்கைகளை கடலரிப்பில் இருந்து எமது பிரதேசத்தினைக் காப்பாற்றுங்கள், கண்விழித்துப் பாருங்கள், ஜனாதிபதி,பிரமதர் ஆகியோரின் கவனத்திற்கு போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 75க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இருந்தனர்.




You may like these posts

Comments