வலுவாதார அபிவி௫த்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் கீழ் சேவா பிரசாதனீ அபிசெஸ் − 2016 தேசிய வி௫தானது கடந்த வருடம் 2016ம் ஆண்டு வன விலங்குகளை பாதுகாப்பதற்காக எடுத்துக்கொண்ட கரிசனைகளை பாராட்டும் வகையில் கடந்த 03.03.2017 திகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை நாட்டின் ஜனாதிபதிஅவர்களினால் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களுக்கு சேவா பிரசாதனீ அபிசெஸ்' விருது வழங்கப்பட்டது.
இவ்விருதிணை பெற்று திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கும், திருக்கோவில் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்ததனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களினதும் ஏற்பாட்டில் 08.03.2017 புதன்கிழமை இன்றைய தினம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக கணக்காளர், திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் சமுர்த்தி முகாமையாளர், மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!