
ஏற்பாட்டில் திருக்கோவில் காலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி, கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.ரவீந்திரன் தலைமையில் நேற்று 2017.02.28 செவ்வாய்க்கிழமை திருக்கோவில் காலாசார மத்திய நிலையதில் நடைபெற்றது.
இவ் விழாவின் போது திருக்கோவில் காலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தொடர்பான கற்கைநெறியினையும் மற்றும் சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம் அரங்கியல் போன்ற கலை தொடர்பான பாடநெறிகளை கடந்த வருடம் 2016 ல்
பூர்த்தி செய்த மாணவர்கள் இதில் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மேலும் இம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இதில் பிரதம திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களும் விசேட அதிதியாக திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன் அவர்களும் கோரவ அதிதிகளாக வளவாளர் திருமதி தேவமலர் தங்கமாணிக்கம், வளவாளர் திரு எஸ். ஸ்ரீகாந்தன், வளவாளர் திருமதி சந்திராவதி ரமணன், வளவாளர் திரு எஸ். சுதேஸ் ருஷந்தன், வளவாளர் திருமதி பிறேமினி செந்தில்குமார்,வளவாளர் திருமதி நிஷாந்தினி தவக்குமரன், வளவாளர் செல்வி எஸ்,சுதேசினி, வளவாளர் செல்வி பௌஜா பாலகிருஸ்ணன், வளவாளர் செல்வன் உ.சுமன் ஆகியோருடன்,
சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.S.நடேசன், திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் திருமதி சரோஜா தெய்வநாயகம், சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் திரு கண. இராசரெத்தினம், திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி ராதிகா கருணாகரன் மற்றும் கிராம உத்தியோகத்தர் திரு. ஏ. கந்தசாமி மற்றும் அழைப்பு அதிதிகாளாக திருமதி சித்திரா பேரின்பநாயகம் மற்றும் வளவாளர் திருமதி சரண்யா துஷ்தரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!