Contact Form

Name

Email *

Message *

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் தலையணை ரோபோ

வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இன்றைய அவசரகால வாழ்வில் தூக்கமின்மையால் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்காக தூக்க மாத்திரைகளை சிலர் உட்கொள்வதுமுண்டு.

Image
வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இன்றைய அவசரகால வாழ்வில் தூக்கமின்மையால் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்காக தூக்க மாத்திரைகளை சிலர் உட்கொள்வதுமுண்டு.

இதற்கு தீர்வு காணும் விதமாக ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலை வடிவத்தில் வளைவான இந்த ரோபோ, நீங்கள் மூச்சுவிடுவதை சீராகக் கண்காணிக்கிறது. அதன்மூலம் உங்கள் தூக்கத்தையும் சீராக்க இது உதவுகிறது.

சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை தூங்கும் போது அருகில் வைத்து பயன்படுத்துவதால் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான மற்றும் ஆழமான தூக்கப் பெறலாம் என்கிறது ஆய்வு.
நெதர்லாந்திலுள்ள டெல்ஃட் பல்கலைக்கழக ரோபாட்டிக்ஸ் பொறியியல் துறை மாணவர்கள் தலையணை ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

உயர் உணர்திறன் சென்சார்கள் இந்த தலையணையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தூங்கி கொண்டிருக்கும் போது நீங்கள் கனவு கண்டு பாதியில் எழுந்தால் ரோபோ தலையணையானது தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறது.

மேலும் தூக்கத்திற்கு ஏதுவான வகையில் ஒருவகை வெளிச்சத்தில் உள்ள விளக்கையும் எரிய வைக்கிறது. தற்போது இந்த ரோபோ தலையணை சோதனை முயற்சியில் உள்ளது.

விரைவில் சந்தையில் களமிறங்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

You may like these posts

Comments