Contact Form

Name

Email *

Message *

அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மாசிமக அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் 2017

அம்பாரை மாவட்ட திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மாசிமக அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் 2017 திருவிழா நிகழ்வானது 02.03.2017 இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி 11.03.201…

Image
அம்பாரை மாவட்ட திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மாசிமக அலங்காரோற்சவ விஞ்ஞாபனம் 2017 திருவிழா நிகழ்வானது 02.03.2017 இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி 11.03.2017 சனிக்கிழமை தீர்த்தோற்சவ நிகழ்வுடன் நிறைவுறவுள்ளது.


இவ் அலங்கார உற்சவ விழாவில் 2017.03.03 திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30மணிக்கு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி நிகழ்வும் தொடர்ந்து 2017.03.08 திகதி புதன்கிழமை வேட்டைத்திருவிழா நிகழ்வானது விநாயகபுரம் காயத்திரி கிராம காயத்திரி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் தொடர்ந்து 2017.03.09  திகதி வியாழக்கிழமை சுவாமியின்  முத்துச்சப்புற நகர்வலம் இடம்பெற்று 2017.03.11 திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்று மறுநாள் 2017.03.12 திகதி ஞாயிறு வைரவர் பூஜை நிகழ்வுடன் திருவிழா நிறைவுறும்.

இவ் அனைத்து கிரிஜைகள் யாவும் சிவாகம வித்தியா பூசனம், சிவாச்சாரியார் திலகம், விபுலமணி கிரியாசாகரர்   சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெறும் .  மற்றும் ஆலய பிரதமகுரு ஈசான சிவதாஷர், சக்தி பூஜா துரந்தரர் பகிதர சுகிர்த சர்மா மற்றும்  வெட்டுகுளம் பிள்ளையார் ஆலய பிரதமகுரு சங்கரப்பிள்ளை தயாள சர்மா அவைகளும் இணைந்து மேற்கொள்வர் .

அனைவரும் வருக...


You may like these posts

Comments