Contact Form

Name

Email *

Message *

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் 19ம் 20ம் திகதிகளில் தென்மாகாணத்தில் மழை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Image
எதிர்வரும் 19ம் 20ம் திகதிகளில் தென்மாகாணத்தில் மழை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றிலிருந்து மழைவீழ்ச்சியின் அளவு குறையக்கூடும் என்றும் கிழக்கு ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் மழை காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும்.

நாட்டில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடற்பிரதேசங்களை அண்டிய பகுதியில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

You may like these posts

Comments