[Photos: S.Raju]திருக்கோவில் கல்வி வலயத்தின் 44வது பாடசாலையாக திகோ/ விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம் 02.01.2017 இன்று திங்கட்கிழமை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர். சுகிர்தராஜன் தலைமையில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இவ் வித்தியாலயமானது திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலம் 1000 பாடசாலைகள் திட்டத்தினுள் உள்ளடக்கபட்ட காரணத்தினால் இங்கு ஆரம்ப பாடசாலை வகுப்புக்களான 1-5 வரையான வகுப்புக்கள் நீக்கபட்டன இதனை தொடர்ந்து வினாயகபுரம் பொதுமக்களும், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களின் அயராத முயற்சியினாலும் இன்று இப் பாடசாலையானது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இன் அங்குரார்ப்பன நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் பிரதிகல்வி பணிப்பாளர் திரு.வை.ஜெயச்சந்திரன், திருக்கோவில் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக யுனிசெப்(unicef)அமைப்பின் இணைப்பாளர் திரு.எஸ்.விவேகனந்தராஜா மற்றும் பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.பி.நாதன், அதிபர் திரு.எம்.அன்ரன் ஆசிரியை திருமதி எஸ்.சண்முகநாதன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.










Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!