[Photos :NR]தம்பிலுவில் சித்தி பாபா பாலர் பாடசாலையின் கலாசார விழா கடந்த 2016.12.30 வெள்ளிக்கிழமை அன்று திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பாலர் பாடசாலையின் அமைப்பாளர் திருமதி.எம்.ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.மோகனகாந்தன், திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன், திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், தம்பிலுவில் திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் திரு.வ.ஜயந்தன் மற்றும் ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி. கோபாலராஜா, முன் பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜி.ரூபன் மற்றும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் திரு.ஜீ.வினயாகமூர்த்தி ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அத்துடன் இவ் கலாசார விழாவில் பாலர் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுக்கும் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்



















































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!