Contact Form

Name

Email *

Message *

பொங்கல் விழாவும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும்

திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் குடிநிலக் கிராம கிளையின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து நடாத்தும் பொங்கல் விழாவும் கெளரவிப்பு  நிகழ்வும்  28.01.201…

Image
திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் குடிநிலக் கிராம கிளையின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து நடாத்தும் பொங்கல் விழாவும் கெளரவிப்பு  நிகழ்வும்  28.01.2017  சனிக்கிழமை இன்று SVO கிளையின் தலைவர் திருமதி.ரி.பரிமேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வானது குடிநிலம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கஜமுகசர்மா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண ஜெர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பணிப்பாளர்  திரு.கே.ஜெயசிறில் அவர்களும் விசேட அதிதிகாளாக தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம்,   குடிநில மக்கள் தேவசபை போதகர் வண ரி.எஸ்.ஜெயமலர், குடிநிலம், சாகாமம் பிரிவு  கிராம அலுவலர் திரு.எஸ்.பார்த்தீபன்,  குடிநிலம் பிரிவு குடும்பநல உத்தியோகத்தர் திருமதி எம்.வசந்தராஜி, திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.பி.நந்தபாலு கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகாளாக   குடிநிலம், சாகாமம் பிரிவு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரி ஜெயச்சந்திரன்,  குடிநிலம், சாகாமம் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.உ.விவேகானந்தி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கலைவதனி திலீபன் ஆகியோர் அதிதிகாளாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் குடிநிலம் கிராமத்தில் கல்விகற்று தரம்-5 புலைமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவிக்கும்,  குடிநிலம் கிராமத்தில் இருந்து கல்விகற்று பல்கலைக்கழகம் தெரிவாகி பட்டம் பெற்ற மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகளையும் பாராட்டி கொவ்ரவிக்கபடனர், அத்துடன் குடிநிலம், சாகாமம் பிரிவு  கிராம அலுவலராக கடமையாற்றிஆசிரியாராக தனது  பணிகளை தொடருகின்ற திருமதி. கருணாம்பிகை கங்காதரன்  அவர்களையும், குடிநிலம், சாகாமம் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற திரு.கே.புவனேந்திரன் ஆகியோரும் மக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்

 இதன் போது இளைஞர் மற்றும் சிறுவர் கழக மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதில் இளைஞர் மற்றும் சிறுவர் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.





































































You may like these posts

Comments