கிழக்கு மாகாணத்தில் தொடர்சியாக அடைமழை பெய்துவருகிறது. இம் மழை திருக்கோவில் பிரதேசத்திலும் கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனை அடுத்து 26.01.2017 வியாழன் நேற்று இரவு ஆரம்பமான தொடர்ச்சியான கோர அடைமழையை அடுத்து திருக்கோவில் பிரதேசத்தில் அனைத்து பகுதிகளும் மழைநீரினால் நிரம்பியதனால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட "தம்பட்டை, தம்பிலுவில்,திருக்கோவில், விநாயகபுரம்,நெருபுரம்,தண்டியடி " போன்ற பகுதிகளில் வெள்ளநீர் மக்களின் வீடுகளினுள்ளும் மற்றும் வீதிகளிலும், பயிர் நிலங்களிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது.இதனை அடுத்து 27.01.2017 வெள்ளிக்கிழமை இன்று காலை திருக்கோவில் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.சி.ஜெயரூபன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆகியோர் வெள்ள நிலைமையை பார்வையிட்டு அவ் தேங்கிய வெள்ளநீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.




























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!