Contact Form

Name

Email *

Message *

எச்சரிக்கை!! கண்டியில் பரவும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று: மூவர் உயிரிழப்பு

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றினால் கண்டியில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Image
இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றினால் கண்டியில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


கண்டி போதனா வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்ஃப்ளூயன்சா AH1 N1 வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மேலும் 05 நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நோயாளர்கள் தற்போது விசேட அறைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், விசேட பாதுகாப்பு திட்டமொன்றை பின்பற்றுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may like these posts

Comments