Contact Form

Name

Email *

Message *

புகைப்பிடித்தல் நோய்களால் வினாடிக்கு மூவர் உயிரிழப்பு

இலங்கையில் புகைப்பிடித்தல் காரணமாக ஏற்பட்டுள்ள நோய்களால் ஒரு வினாடிக்கு மூவர் வீதம் உயிரிழப்பதாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனார…

Image
இலங்கையில் புகைப்பிடித்தல் காரணமாக ஏற்பட்டுள்ள நோய்களால் ஒரு வினாடிக்கு மூவர் வீதம் உயிரிழப்பதாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.


புகைப்பிடித்தல் காரணமான நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென நாட்டு வருமானத்தில் 72 பில்லியன் ரூபாவை வருடாந்தம் செலவிடுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி மாவட்ட மருந்து பொருள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த கூட்டம் காலி உனவட்டுனவில் 22.01.2017  அன்று  நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டதாவது:'48 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்காக மருந்தகங்களின் உரிமையாளர்கள் பெரும் பங்களிப்பை நல்கினர். சந்தையில் பொருட்களை விற்பனை செய்வது போன்று ,மருந்து பொருட்களை விற்பனை செய்ய முடியாது. சிறியதொரு தவறு ஏற்பட்டாலும் அது பிரச்சினையாகி விடும். எல்லோராலும் வியாபாரம் செய்ய முடியாது.
அதேநேரம் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் வீதம் 55 வரை அதிகரித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளில் 45 வீதத்தினரே சிகிச்சை பெறுகின்றனர். இப்போது அரசாங்க வைத்தியசாலையில் உச்ச அளவில் இலவச சுகாதார சேவை நடைமுறையில் உள்ளது.
அரசாங்க வருமானத்தில் 72 பில்லியன் ரூபா புகைப்பிடித்தல் காரணமாக நோய்களுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவே செலவிடப்படுகின்றது.

அதனால் புகைப்பிடித்தல் பழக்கத்தைக் குறைப்பதற்கென அரசாங்கம் ஒழுங்குமுறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன் கீழ் புகையிலைக்கான வரியை 90 வீதம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

You may like these posts

Comments