(NR) 2016ஆம் ஆண்டுக்கான சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகார அலுவலகத்தின் ஏற்பாட்டில் 2016.12.01 வியாழக்கிழமை இன்று அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் ஏ.எல்.அலாவூதீன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது. இன் பேரணியானது தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலத்தின் அருகாமையில் ஆரம்பித்து தம்பிலுவில் பிரதான பாதையின் ஊடாக சென்று திருக்கோவில் பிரதேச செயலகத்தினை அடைந்தது.இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்எம்.நஸீர் , கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் முருகானந்தம், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் ஏ.எல்.அலாவூதீன், திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் மற்றும் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.இராஜேந்திரா மற்றும் திருக்கோவில் வைத்தியசாலை வைத்திய அதிகாரி மோகனகந்தன் மற்றும் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகார அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!