அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச தமிழ் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சீருடை வழங்கும் நிகழ்வானது கடந்த 12.12.2016 திங்கட்கிழமை கல்முனை, நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளர் ஜனாப்.K.M.சுபைர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.தண்டாயுதபாணி அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் அவர்களும், பாலர் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.தண்டாயுதபாணி அவர்களாலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களாலும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச தமிழ் பாலர் பாடசாலையின் 281 ஆசிரியைகள் சீருடைத் துணிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.




















Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!